“கையில் ஆயுதத்துடன் யாரையோ தேடிக்கொண்டிருந்த ஆடவர்” – கைது செய்யும்போது போலீஸ் மீது வீசியதால் பரபரப்பு!

Singapore Police Force

சிங்கப்பூரில் 27 வயதான ஆடவர் ஒருவர் போலீஸ் அதிகாரி மீது கத்தியை எறிந்து காயப்படுத்தியதாக இன்று புதன்கிழமை (மார்ச் 16) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 9.10 மணியளவில், ஆடவர் ஆயுதம் ஏந்தி சத்தம் போடுவதாக போலீசாருக்கு புகார் கிடைத்தது.

2 வருட கட்டுப்பாட்டிற்கு பின் மகிழ்ச்சி..அதிகாரிகளுடன் ஐலேண்டிற்கு ஜாலி ட்ரிப் – வெளிநாட்டு ஊழியர்கள் நெகிழ்ச்சி!

அதாவது, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8ல் அந்த ஆடவர் யாரையோ தேடி கூச்சலிடுதாக காவல்துறைக்கு உதவி வேண்டி அழைப்பு வந்தது.

பின்னர் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து ​அந்த ஆடவரை கைது செய்ய முனையும்போது, தனது டி-சர்ட்டுக்கு உள்ளே இருந்து கத்தியை வெளியே எடுத்து, போலீஸ் அதிகாரி ஒருவரை நோக்கி அதை எறிந்தார்.

வீசப்பட்ட கத்தி, அதிகாரியின் வலது கன்னத்தில் தாக்கியது என்று காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

பின்னர் கத்தியை கைப்பற்றி, அந்த நபரின் வீட்டில் சோதனை நடத்தினர், அங்கு அதிகாரிகள் மேலும் ஐந்து கத்திகளைக் கண்டுபிடித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் பயங்கரவாதச் செயலாகக் கருதப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் இன்று முதல் வந்துள்ள அதிரடி மாற்றங்கள்; அனைத்தும் ஒரே பதிவில் – வாங்க பார்ப்போம்!