சிலேத்தர் நார்த் லிங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்த ஆடவர் – மோசமான பகுதி என நெட்டிசன்கள் காட்டம்

Man death Seletar North Link
Stomp

சிலேத்தர் நார்த் லிங்கில் 41 வயதுமிக்க ஆடவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கடந்த மார்ச் 22 அன்று சுமார் இரவு 9.55 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

அடுக்குமாடி ஜன்னல் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மூதாட்டி… பதைபதைக்கும் காட்சி – கைது செய்த போலீஸ்

அதன் பின்னர் அந்த ஆடவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் SCDF கூறியது.

மேலும் அன்று இரவு 10.06 மணியளவில் உதவி வேண்டி அழைப்பைப் பெற்ற போலீசார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அந்த நபர் சுயநினைவின்றி இருந்ததாகவும், பின்னர் அவர் இறந்துவிட்டதாவும் தெரிவித்தனர்.

அவர் இயற்கையான காரணங்களால் இறந்தார் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட சம்பவ இடம் அடங்கிய புகைப்படங்களில், ஜல்லிக்கற்கள் மற்றும் இரத்தம் கொட்டி கிடப்பதை காண முடிகிறது.

இது தொடர்பான பதிவிற்குப் பதிலளித்த பல இணையவாசிகள், அந்தப் பகுதி அபாயகரமானதாக காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

“இது என்ன உங்க தாத்தா வீட்டு சாலையா?” – சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான பதாகைகள்!