புக்கிட் மேராவில் ஆடவர் ஒருவர் பின்னோக்கி நடந்து சாலையை கடக்க முயற்சித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஆனால் பின்னோக்கி மெது மெதுவாக சென்றதால் சாலையில் தடுக்கி கீழே விழுந்தார், நல்ல வேலையாக விபத்தில் ஏதும் சிக்கவில்லை.
சிங்கப்பூரில் புகழ்பெற்ற “Mr and Mrs Mohgan’s” கடையின் உரிமையாளர் “சோமசுந்தரம் மோகன்” காலமானார்
வெறும் காலுடன் காலணிகள் அணியாமல் இருந்த அந்த ஆடவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது, ஆனால் உண்மை என்னவென்று தெரியவில்லை.
டபுள் டெக்கர் பேருந்து போன்ற வாகனங்கள் சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அவர் பின்னோக்கி விழுவதை காண முடிகிறது. நல்ல வேலையாக நல்லுள்ளம் கொண்ட ஆடவர் ஒருவர் அவரைக் காப்பாற்றினார்.
அவர் சாலையை கடந்த அந்த நேரத்தில், போக்குவரத்து விளக்கு பச்சை நிறமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வீடியோவுடன் வந்த பேஸ்புக் பதிவின்படி, இந்த சம்பவம் மார்ச் 12, 2022 அன்று இரவு 9:15 மணியளவில் ஜாலான் புக்கிட் மேரா மற்றும் லோயர் டெல்டா சாலை சந்திப்பில் நிகழ்ந்தது.
சிங்கப்பூரில் இன்று முதல் வந்துள்ள அதிரடி மாற்றங்கள்; அனைத்தும் ஒரே பதிவில் – வாங்க பார்ப்போம்!