குறுகிய வடிகாலில் தவறி விழுந்த ஆடவர் (Video).. 30 நிமிடங்கள் போராடி மீட்ட SCDF

Man falling into Havelock Road drain struck

சிங்கப்பூரில் பிளாக் 22 ஹேவ்லாக் சாலையில் (Havelock Road) அமைந்துள்ள வடிகால் மேலே கவர் போடப்பட்டு இருந்தன.

துரதிஷ்டவசமாக 50 வயதிற்குட்பட்ட ஒருவர் அதனுள்ளே விழுந்து சுமார் 30 நிமிடங்கள் மாட்டிக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தொற்று காரணமாக மேலும் 18 பேர் இறந்துள்ளதாக அறிவிப்பு

இருப்பினும், அவர் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் மீட்கப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ SG Road Vigilante என்ற பேஸ்புக் குழுவில் வெளியானது.

மேலும் அவரை ஐந்து துணை மருத்துவர்கள் சாக்கடையில் இருந்து கவனமாக வெளியே தூக்கி அருகிலுள்ள ஸ்ட்ரெச்சருக்கு மாற்றத் தயாராகி வருவதையும் நம்மால் அந்த வீடியோவில் காணமுடிகிறது.

அந்த ஆடவரின் முதுகில் காயம் ஏற்பட்டதை புரிந்துகொள்ள முடிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

அன்று மாலை 4.50 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

பின்னர் அவர் சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் SCDF கூறியுள்ளது.

கோத்தபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் சலுகை வழங்கியதா? – அமைச்சர் விளக்கம்