“உழைப்பு நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை” – இதைக்கேட்டு நிறுவனத்தின் 20 கோப்புகளை நீக்கிய ஊழியருக்கு அபராதம்!

Unsplash

நிறுவனத்தின் கூகுள் டிரைவ் கணக்கிலிருந்து 20 கோப்புகளை நீக்கிய ஊழியருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

30 வயதான டான் வெய் சியாங் என்ற அந்த ஊழியருக்கு இன்று செவ்வாய்கிழமை (டிசம்பர் 7) S$5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சட்டவிரோதக் குழுக்களின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 9 ஆடவர்கள் கைது

கம்ப்யூட்டர் தகவல்களை அனுமதி இல்லாமல் மாற்றியமைத்த ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

அல்ஜூனிட் தொழிற்பேட்டையில் உள்ள இறைச்சி உற்பத்தி நிறுவனமான 786 SG-இல் உற்பத்தி மேலாளராக அந்த ஆடவர் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.

அவரின் வேலையில், உற்பத்தி அட்டவணையை திட்டமிடுதல் மற்றும் பொருட்களின் தரத்தை சரிபார்த்தல் ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி, அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார், அவரது வேலை ஒப்பந்தத்தின்கீழ், 30 நாள் நோட்டீஸ் பீரியட் காலம் ஆகும்.

பின்னர் ஜனவரி 12 அன்று, அவரது நேரடி மேற்பார்வையாளர் டானிடம் பணிநீக்கம் தொடர்பான கடிதத்தை அளித்தார்.

அதில், அவருடைய ஒட்டுமொத்த உழைப்பு, நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் ஒரு நாள் நோட்டீஸ் காலத்துடன் அவரது வேலை நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

பின்னர் அந்நாளின் பிற்பகுதியில் அலுவலகத்தில் இருந்த டான், நிறுவனத்தின் கூகுள் டிரைவ், கிளவுட் அடிப்படையிலான தரவு சேமிப்பக வசதியை அணுக, தனது நிறுவனக் கணக்கைப் பயன்படுத்தினார்.

நிறுவனத்துக்குச் சொந்தமான 20 ஆவணங்களை Binக்கு நகர்த்தி அதில் சில தொகுதிகளை நீக்கினார். பின்னர் அவர் இந்த 16 ஆவணங்களை Binல் இருந்து delete செய்தார்.

பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிராங்கூன் சென்ட்ரலில் இரத்தம் சொட்ட சொட்ட சண்டையிட்டுக் கொண்ட ஆடவர்கள் கைது – (காணொளி)