சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தவருக்கு அபராதம்..!

Man fined for setting off fireworks in Little India on Deepavali

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கடந்த தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்த ஒருவருக்கு 3000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 27ம் தேதி நள்ளிரவு 12.40 மணியளவில், சிவசரவணன் சுப்பையா முருகன் என்பவர் தனது நண்பர்களோடு மது அருந்துவதற்காக அங்குள்ள மொஹிகன்ஸ் பப்பிற்கு சென்றுள்ளார்.

மெட்ராஸ் ஸ்ட்ரீட்டுக்கும், கேம்பல் லேனுக்கும் இடையே உள்ள சந்திப்பில் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது, அவர் கண்காணிப்பு கேமராக்கள் அங்கு இல்லை என்பதை உணர்ந்த அவ்வாறு செய்துள்ளார்.

ஃபாரர் பார்க் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு கண்காணிப்பு இடத்திலிருந்து போலீஸ் அதிகாரி ஒருவர் அதிகாலை 12.39 மணியளவில் வானவேடிக்கைகளை வானில் பார்த்துள்ளார்.

மேலும், பட்டாசு வெடித்த சத்தத்தைக் கேட்டவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அங்கு சிவசரவணனை காணவில்லை.

இந்நிலையில், பட்டாசு வெடித்ததில் எந்தவித பொருள் சேதம் யாருக்கும் எந்த பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டத்திற்குப் புறம்பான பட்டாசு வெடித்தற்காக அவருக்கு 3000 வெள்ளி அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது அபராதத்தை இரண்டு தவணைகளில் செலுத்த கோரிக்கை வைத்தார், பின்னர் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது.

ஆபத்து விளைவிக்கக்கூடிய வாண வேடிக்கைகளை வெடிப்பவர்களுக்கு 2000 வெள்ளியில் இருந்து 10 ஆயிரம் வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.