முகக்கவசம் அணியாமல் கடையில் இனவாத கருத்துக்களை கூறியவர்க்கு அபராதம்!

தனது மனைவிக்கு பால் வாங்க சென்ற ஆடவர் ஒருவர், முகக்கவசம் அணியாத காரணத்தால் மூன்று கடைகளில் விற்பனை இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார்.

அதனை தொடர்ந்து, மற்றொரு பானக் கடைக்கு சென்றுள்ளார், அங்கும் அவருக்கு விற்பனை மறுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் டபுள் டெக்கர் SBS பேருந்து பெண் மீது மோதி விபத்து!

பின்னர் அந்த ஆடவர் கடை மேலாளரை நோக்கி இனவாதக் கருத்துகளைக் கூறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் 53 வயதான முகமத் அலி ரம்லி என்ற அந்த ஆடவரும் S$4,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியவில்லை, இன உணர்வுகளை பேசி காயப்படுத்தியது மற்றும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஆகிய 3 குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு இன்று அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பான காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியானது, அதைத் தொடர்ந்து ரம்லியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

முகக்கவசம் சரியாக அணியாத காரணத்திற்காக, ஆறு மாதங்கள் வரை சிறை, S$10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, ஆறு மாதங்கள் வரை சிறை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இனவாதக் கருத்துகளுக்கு, 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் புதிதாக 6 பேருக்கு கிருமித்தொற்று உறுதி!

சக ஊழியருக்கு கிருமித்தொற்று…தனிமை உத்தரவு மீறி சுற்றித்திரிந்த ஊழியருக்கு சிறை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…