சிங்கப்பூரில் கழிப்பறை தண்ணீரை மினரல் வாட்டராக விற்றவருக்கு அபராதம்

Man fined mineral water

கழிப்பறை தண்ணீரை மினரல் வாட்டராக பாட்டிலில் அடைத்து விற்ற ஆடவருக்கு S$3,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் லிம் லியான் சாய் (Richard Lim Lian Chye), என்ற அந்த ஆடவர் உணவு விற்பனைச் சட்டத்தின் கீழ், உரிமம் இல்லாமல் வர்த்தகத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

நாட்டின் அடிப்படையில் வேலை.. ஆள் எடுப்பில் பாகுபாடு – 50 முதலாளிகளின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து

285 லிட்டர் பாட்டில் தண்ணீரை விற்பனை செய்த அவர், 55 செரங்கூன் நார்த் அவென்யூ 4இல் டிரிங்க்ஸ்டார் எண்டர்பிரைஸ் (Drinkstar Enterprise) என்ற நிறுவனத்தை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

முன்பு நிறுவனம் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாட்டில் தண்ணீரை விற்றது, ஆனால் 2018ஆம் ஆண்டில் தண்ணீரை இறக்குமதி செய்வதில் சிக்கல்களைத் சந்தித்தது.

அதனை அடுத்து, லிம் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள கழிப்பறை குழாய் வழியாக நீரை நிரப்பி விற்றதாக கூறப்படுகிறது.

உரிமம் இன்றி நிறுவனம் செயல்பட்ட குற்றத்திற்காக அதிகபட்சமாக S$5,000 அபராதம் விதிக்கப்படலாம்.

போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது