உட்லண்ட்ஸில் கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம்

Man found dead Republic Polytechnic
Google Street View

உட்லண்ட்ஸில் அமைந்துள்ள ரிபப்ளிக் பாலிடெக்னிக் அருகே 49 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

7 உட்லண்ட்ஸ் அவென்யூ 9ல் கடந்த சனிக்கிழமை (ஆக 19) நடந்த இயற்கைக்கு மாறான மரணம் குறித்து பிற்பகல் 2.45 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்: ஒருவர் மரணம் – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள்

அந்த ஆடவர் இறந்தது அங்கு சென்ற அதிகாரிகளால் சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

மேலும் எந்த ஒரு சதிச் செயலும் இதில் சந்தேகிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

​​ரிபப்ளிக் பாலிடெக்னிக் பள்ளி வளாகத்திற்கு வெளியே அந்த ஆடவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக Today கூறியுள்ளது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள்: 4 மில்லியன் S$10 நினைவு நாணயங்கள்

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்