ஆடவர் ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறை, எட்டு பிரம்படிகள் விதித்து அதிரடி தீர்ப்பு

Capital punishment in Singapore is a legal penalty

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் 3 சிறுவர்களை நாசம் செய்த குற்றத்திற்காக 21 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனையும் எட்டு பிரம்படிகளும் அவருக்கு விதிக்கப்பட்டன.

தன்னை தானே மத போதகர் என்று சொல்லிக்கொண்ட அவருக்கு வயது 35 என்றும் சொல்லப்பட்டுள்ளது. சிறுவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க சிங்கப்பூரரான அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் சேவையை நடத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை

குற்றம் நடந்த போது சிறுவர்களுக்கு வயது 11 முதல் 16 வரை இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர் வீடியோ கேம் விளையாட்டு செயலி மூலம் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் சிறுவர்களை சந்தித்துள்ளார்.

2014 முதல் பல ஆண்டுகளாக அவர் சிறுவர்களை பயன்படுத்தி கொண்டு பாலியல் ரீதியாக நாசம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அதற்கு ஈடாக பிளேஸ்டேஷன் விளையாட்டு பொருட்கள் போன்ற பரிசுகளை அவர்களுக்கு வழங்கினார்.

2019 பிப்ரவரி மாதத்தில், பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவருக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்டதாகவும், அதை அறிந்த பிறகும் அந்த ஆடவர் பாதிக்கப்பட்டவர் மீது பாலியல் குற்றங்களைத் தொடர்ந்துள்ளார்.

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு: தொடக்கமே நல்ல சம்பளம்.. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குவிந்த விண்ணப்பம்