வயதான தந்தையை முகத்தில் அறைந்து, துண்டை வைத்து அடித்து துன்புறுத்திய மகனுக்கு சிறை

Man gets jail slapping father
Photo: iStock

சிங்கப்பூரில், 42 வயதுடைய ஆடவர் தனது தந்தையின் முகத்தில் பலமுறை அறைந்தும், துண்டு துணியை பயன்படுத்தி அவரை மேலும் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், 42 வயதான முகமது ஆரிஃபின் தாஜுதீன் என்பவர் மீது பாதிக்கப்படக்கூடிய வகையில் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக மூன்று வார சிறைத்தண்டனை இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) விதிக்கப்பட்டது.

“யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்” தீம் பார்க்கிற்கு சென்ற 120 வெளிநாட்டு ஊழியர்கள் – செம்ம என்ஜாய்!

இந்த ஜனவரி மாதம், குடும்ப நீதி நீதிமன்ற நீதிபதி விதித்த தனிநபர் பாதுகாப்பு உத்தரவை மீறியதாகவும் அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.

ஆரிஃபின் தனது 75 வயது தந்தையுடன் புக்கிட் பஞ்சாங்கில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி, ஆரிஃபின் தனது தந்தையுடன் படுக்கையறையில் இருந்தபோது, ​​​​அவர் கழிவறையைப் பயன்படுத்தியதால் ஆரிஃபின் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து, ஆரிஃபின் தனது தந்தையின் முகத்தில் பலமுறை அறைந்தும், பின்னர் துணி துண்டை பயன்படுத்தி தந்தையின் முகத்திலும் தாக்கியுள்ளார்.

Work passes, PR உள்ளிட்ட அனுமதிகள் பெற இனி கட்டுப்பாட்டு நிபந்தனை… பிப்ரவரி 1 முதல் நடைமுறை