குழந்தைகளை பிரிந்து வாடுவதாக கவலை கொண்ட வெளிநாட்டு ஊழியர் – “உங்களால் தான் இன்று சிங்கப்பூர்” அன்பளிப்பு வழங்கிய சிங்கப்பூரர்

man give foods migrant workers in singapore national day

சிங்கப்பூரின் 58வது தேசிய தினம் மிக பிரம்மாண்டமாகவும், உற்சாகமாகவும் தீவு முழுவதும் கொண்டாடப்பட்டது.

அது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரில் உள்ள ஆடவர் ஒருவர் சற்று வித்தியாசமாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு வழங்கி தேசிய தினத்தை கொண்டாடி மகிழ்ந்தார்.

“சிங்கப்பூரில் சிறந்த வேலை..” – 4,000 இளம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் குடிமக்கள் அந்தஸ்து

வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$58 மதிப்புள்ள பிரியாணி மற்றும் பானங்கள் வழங்கி மகிழ்விவித்தார் அவர்.

முஹம்மது நூர் திஜானி என்ற அவர், போட் கீ பகுதியிலுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு மற்றும் பானங்களை வாங்கி விநியோகிப்பதைப் போன்ற TikTok வீடீயோவை பகிர்ந்துள்ளார்.

அதனை பெற்றுக்கொண்ட ஊழியர்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

ஒரு மகனும் மகளும் வீட்டில் தனக்காகக் காத்திருப்பதாகவும், அவர்களை பிரிந்து வாடுவதாகவும் நூரிடம் ஊழியர்களில் ஒருவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விட்டுவிட்டு சிங்கப்பூரை கட்டி எழுப்ப பாடுபட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

“தேசிய தினம் என்பது சிங்கப்பூரர்களுக்கு மட்டுமல்ல, நாங்கள் இல்லம் என்று அழைக்கும் இந்த நாட்டை கட்டிய அனைவரும் கொண்டாடும் சிறப்பான நாள்” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீர்வு தொகை வேண்டும்” – இரு நிறுவனங்களை ஏமாற்றிய இந்தியருக்கு செக்