சிங்கப்பூரில் ஆடவர் ஒருவருக்கு ஆறு பிரம்படிகள் விதித்து அதிரடி தீர்ப்பு

Capital punishment in Singapore is a legal penalty

ஸ்டாம்ஃபர்ட் சாலையில் கையில் கோடாரியுடன் காவல்துறை அதிகாரிகளை அணுகிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு நேற்று ஆறு மாதங்கள் மற்றும் 14 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதோடு சேர்த்து அவருக்கு ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை

ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவியது.

மனோகர் திருநாவுக்கரசு என்ற அந்த ஆடவர் முதியவரை தானாக முன்வந்து தாக்கியது, காவல்துறை அதிகாரியை கொச்சை வார்த்தைகளால் திட்டியது, தாக்குதல் ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் அவரது தண்டனையின் போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

26 வயதான சிங்கப்பூரர் மனோகர், அந்த நேரத்தில் வீடற்ற நிலையில் இருந்ததால், தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கோடாரியை தன்னுடன் எடுத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அதனை அவர் சைனாடவுனில் இருந்து சுமார் $11க்கு வாங்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

முதியவர்கள் சிலர் 30 வயதுமிக்க பெண்ணுடன் இருப்பதை கண்ட மனோகர் அங்கிருந்து அந்த பெண்ணை மட்டும் போக சொல்லியுள்ளார்.

ஆனால், அந்த பெண் போக மறுக்கவும் அங்கிருந்த முதியவர்களில் ஒருவர் என்ன பிரச்சனை என்று கேட்டு விலக்கிவிட, அவரை மனோகர் தாக்கியுள்ளார்.

இதனால் முதியவருக்கு காயம் ஏற்பட்டது, பின்னர் அவரை கைது செய்த போலீஸ் அதிகாரியையும் மனோகர் கொச்சை வார்த்தைகளில் பேசி முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் எனவும் சொல்லப்பட்டுள்ளது

சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. இந்திய ஊழியர்களுக்கு அடிக்கும் அதிஷ்டம்