பாதசாரிகள் இடையே வாகனத்தை செலுத்தியவருக்கு சிறை – 4 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை..!

Man jailed after car ploughs into crowd of pedestrians in CBD
(Photo: Facebook/Tan Jacken)

சிங்கப்பூர் மத்திய வர்த்தக வட்டாரத்தில், மற்றொரு ஓட்டுனரை முந்திச்செல்ல ஆடவர் ஒருவர் தனது காரின் வேக வரம்பை இரண்டு மடங்கு அதிகமாக்கி பாதசாரிகள் கூட்டத்தில் இடையே செலுத்தியதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், இரண்டு பேர் வாகனத்தில் சிக்கி காயமைந்தனர் என்றும், மூன்றாவதாக ஒருவரின் கால் மீது கார் ஏறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் முதலாளியை 100 முறை கத்தியால் குத்திய பணிப்பெண் – வழக்கு மறுவிசாரணை..!

இந்த குற்றத்திற்காக, 27 வயதான லிம் வீ ஷெங்கிற்கு நேற்று (செப்டம்பர் 21) 15 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 6 மணியளவில் கிராஸ் ஸ்ட்ரீட்டை நோக்கி ஐந்து வழிச் சாலையின் இரண்டாவது பாதையில் லிம் வாகனம் ஓட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Central Boulevard மற்றும் மெரினா வே சந்திப்பை நெருங்கியபோது, ​​லிம் தனக்கு முன்னால் இருந்த ஒரு காரை முந்த முயன்றார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் பாதசாரிகள் கூட்டத்தில் இடையே சென்றது.

இதில் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக, லிம்க்கு நான்கு ஆண்டுகள் வரை சிறை அல்லது S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூர்வாசிகள் அனைவருக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 2 இலவச முகக்கவசங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…