சிகரெட் துண்டால் நேர்ந்த சேதம்… சிக்கிய ஊழியர் – சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த கோர்ட்

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

வீட்டுவசதி கழகத்தின் சேமிப்புப் பகுதியில் சிகரெட்டை நெருப்புடன் தூக்கி எறிந்து, இரண்டு கார்களை தீக்கு இரையாக்கிய ஆடவர் ஒருவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 4) விதிக்கப்பட்டது.

சுவா செங் சூ என்ற அந்த 52 வயதான ஆடவர், கவனக்குறைவாக தீ ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூர் பயணிகளுக்கு இனி அனைத்தையும் இலகுவாக்கும் “MyICA” ஆப்: Visit pass-களையும் நீட்டிக்கலாம்!

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டிற்குச் செல்லும் வழியில் கிளந்தான் சாலையில் உள்ள பிளாக் 28A வில் உள்ள படிக்கட்டுகளின் கீழே அமர்ந்து சிகரெட் புகைத்துள்ளார் சுவா.

பின்னர் அவர் எரிந்து கொண்டிருந்த சிகரெட் துண்டை, பல்வேறு பொருட்கள் நிரப்பப்பட்ட படிக்கட்டுக்கு அடுத்துள்ள சேமிப்பு பகுதியில் வீசியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இதனால் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு கார்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

JUSTIN: இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!