சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபரை தாக்கிய சீன நாட்டவர் – சிறைத்தண்டனை விதிப்பு

(Photo: iStock)

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரியான பிரகாஷ் கோவிந்தன் தாமோதரனை தாக்கிய குற்றத்திற்காக சீன நாட்டவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் கீழே விழுந்ததில் தாமோதரனுக்கு மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தமிழ்நாட்டு ஊழியரின் அரிய வெற்றி.. முதலாளிக்கு எதிராக வழக்கு – நஷ்டஈடு பெற்று சாதனை

இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இயக்குனரான வாங் லின் என்ற அந்த சீன நாட்டவருக்கு ஆறு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2021 நவம்பர் 6 அன்று, ஷாப்பிங் மாலுக்கு வெளியே தாமோதரனை தள்ளிவிட்டு தானாக முன்வந்து கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால், கட்டிடத்திற்கு மிக அருகில் உள்ள டாக்சிகளுக்காக பாதையில் வாங் வாகனத்தை ஓட்டினார்.

அதனை கண்ட தாமோதரன், டாக்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட பாதை இது, எனவே வண்டி செல்ல அனுமதி இல்லை என வண்டியை நிறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.

இதில் காயமடைந்த தாமோதரன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

செப். 1 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் – இந்திய ஊழியர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை அனுமதி