“நிர்வாண வீடியோக்களை ஆன்லைனில் போட்டுவிடுவேன்” பெண்ணுக்கு மிரட்டல் – ஆடவருக்கு சிறை

(Photo : ABC)

தனது முன்னாள் காதலியின் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டிய ஆடவருக்கு இன்று (ஜூன் 7) 12 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

23 வயதுமிக்க அவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிட்டத்தட்ட 20 வயதுக்கு குறைவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

“மலக்குல் மௌத்” Tiktok கொடூர சவாலில் ஈடுபட்டு உயிரை விட்ட இந்தோனேசிய ஆடவர்

அந்த பெண்ணின் அந்தரங்க படங்கள் மற்றும் பதிவுகளை அவரின் அனுமதியின்றி பதிவேற்றம் செய்வதாக மிரட்டிய ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

இவர்கள் இருவரும் கடந்த 2018 முதல் 2021 வரை உறவில் இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஆடவரிடம் கடனை திருப்பி கேட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், பாதிக்கப்பட்டவருக்கு படிப்படியாக மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்த அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.

அந்த ஆடவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை சுமார் S$12,700க்கு மேல் கடன்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடனை கேட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையில், அவர் அவ்வாறு மிரட்ட இதுகுறித்து போலீசில் புகார் செய்தார் பெண்.

இதற்காக, ஐந்து வருடங்கள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது கலவையாக விதிக்கப்படலாம்.

Great World ஷாப்பிங் மாலில் கடும் சண்டை… வீடியோ அதிகம் வைரலானதை அடுத்து இருவரை தூக்கியது போலீஸ்!