முகக்கவசம் அணிய சொன்ன அதிகாரியை கத்தியால் குத்திய ஆடவர்; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!

Pic: SPF

சிங்கப்பூரில் முகக்கவசம் அணிய சொன்ன பாதுகாப்பு இடைவெளி அதிகாரி ஒருவரை கத்தியால் குத்திய 62 வயது ஆடவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பூங்காக் கழகத்தைச் சேர்ந்த அந்த அதிகாரியின் நெஞ்சு பகுதியில் அஹிருதீன் என்ற ஆடவர் கத்தியால் தாக்கியதில் அதிகாரி படுகாயம் அடைந்தார். அதிகாரிக்கு நிரந்தரக் காயங்களும் ஏற்பட்டன.

சிங்கப்பூர் சாலையோரத்தில் படுத்த படுக்கையாக கிடக்கும் நபரை போட்டு “உதைத்து தாக்கும்” ஆடவர் – போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி அன்று நடந்துள்ளது. அதிகாரியை கத்தியால் குத்திய அந்த ஆடவருக்கு
13 ஆண்டுகள், 4 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி கூறுகையில், அதிர்ஷ்டவசமாக அந்தக் கத்தி அதிகாரியின் இதயத்தைக் காயப்படுத்தவில்லை என்றார். பாதுகாப்பு இடைவெளி அதிகாரிகளுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க அந்த ஆடவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அதிகாரியை கத்தியால் குத்திய அந்த ஆடவரின் வயது காரணமாக பிரம்படி விதிக்க முடியாது என்றும், இல்லாவிடில் அவருக்கு 18 பிரம்படிகள் விதிக்கப்பட்டிருக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

ஊழியர்களின் லாரியின் மீது ஏறி பொருட்களை வீசி தகராறு…போலீசுக்கு திட்டு, உதை – வெளிநாட்டவருக்கு சிறை, அபராதம்!