பற்றி எரிந்த தீ.. 2வது மாடியில் இருந்து குதித்த ஆடவர் – இவரை காப்பாற்ற வெளிநாட்டு ஊழியர் எடுத்த முயற்சிகள் வீண்

Man jumps out of window in Yishun to escape fire
SHIN MIN DAILY NEWS

சிங்கப்பூரில், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 19) மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள 30 வயதான ஆடவர் ஒருவர் யுஷுனில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார்.

உதவி வேண்டி அந்த ஆடவர் அழுவதைக் கேட்ட திரு ஹமீத் என்ற பங்களாதேஷைச் சேர்ந்த துப்புரவு ஊழியர், சோபா ஒன்றை அந்த ஆடவர் விழும்போது வைத்து காப்பாற்ற நினைத்தார்.

மரத்தூளுக்குள் தங்கம்…சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பயணிகள்- அதன் மதிப்பு ரூ.49 லட்சமாம்!

ஆனால், சோபாவை நகர்த்துவதற்குள், அவர் தரையில் விழுந்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

“அவர் ஜன்னலுக்கு வெளியே தொங்குவதை நான் பார்த்தேன், அதனால் அவருக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சித்தேன்” என்று 34 வயதான ஊழியர் கூறினார்.

காயமடைந்த அந்த ஆடவர், கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

பிற்பகல் 1.50 மணியளவில் பிளாக் 512A யுஷுன் ஸ்ட்ரீட் 51ல் சமையலறையின் ஏற்பட்ட தீ பற்றி SCDF படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே சுமார் 50 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து SCDF விசாரணை நடத்தி வருகிறது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டும் மெரினா பே வட்டாரத்தில் “புத்தாண்டு வாணவேடிக்கை” இல்லை