ஊழியர்களின் லாரியின் மீது ஏறி பொருட்களை வீசி தகராறு…போலீசுக்கு திட்டு, உதை – வெளிநாட்டவருக்கு சிறை, அபராதம்!

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

சிங்கப்பூரில், குடிபோதையில் காவல்துறை அதிகாரிகளை திட்டி, உதைத்து, பொது இடத்தில் அமைதியை குலைத்த வெளிநாட்டு ஆடவர் சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டுள்ளார்.

40 வயதான கேமரூன் லாச்லான் மில்னே என்ற அவர் ஊழியர்களின் லாரியின் மீது ஏறிச் சென்று உபகரணங்களைச் வெளியே எறிந்தார்.

கடந்த மாதங்களாக குடியிருப்புகளில் திடீரென தாக்கும் உலோக பேரிங் மணிகள் – தயாராக இருக்கும் போலீஸ்

பின்னர், அவரின் செயல்களை கண்ட NDP காக கேபிள் நிறுவும் பணிகளைச் செய்து கொண்டிருந்த ஊழியர்களில் ஒருவர் போலீசிடம் புகார் செய்தார்.

ஆஸ்திரேலிய நாட்டவரான அவர் அங்கிருந்து வெளியேற முயன்றார்,  ஆனால் தடுக்கி கீழே விழுந்தார்.

பின்னர், போலீசார் வந்து அவரை கைது செய்து காரில் ஏற்றியபோது, ​​மில்னே அதிகாரிகளில் ஒருவரை அடித்து உதைத்து, தகாத வார்த்தைகளில் திட்டியும் உள்ளார்.

இந்நிலையில், தனியார் ஜெட் விமானியான அவருக்கு நேற்று (மார்ச் 18) 10 வார சிறைத்தண்டனையும் S$5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பொது ஊழியரை காயப்படுத்தியதற்காகவும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகவும், குடிபோதையில் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட “இந்திய பயணிகளுக்கு தனிமை இல்லா” பயணம் – விமான சேவை குறித்த முழுமையான விவரம்!