சாங்கி விமான நிலையத்தில் போர்டிங் பாஸை தவறாகப் பயன்படுத்திய ஆடவர் கைது

Changi airport police arrest misusing boarding pass
SPF/FB & Changi Airport website

போர்டிங் பாஸை தவறாகப் பயன்படுத்தியதற்காக 55 வயது ஆடவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 12 அன்று கைது செய்யப்பட்டார்.

சாங்கி விமான நிலையத்தின் விமான போக்குவரத்துப் பகுதிக்குள் (Transit area) நுழைவதற்காக வேண்டி அவர் அதனை தவறாக பயன்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நூலக ஊழியர்கள் மாத சம்பளம் S$6,269… 50 சதவீதம் அதிகரிப்பு

அந்த நபர் போர்டிங் பாஸைப் பெறுவதற்காக வேண்டி விமான டிக்கெட்டையும் வாங்கியதாக சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) கூறியுள்ளது.

அவர் சிங்கப்பூரில் இருந்து புறப்படும் தனது காதலியை வழியனுப்புவதற்காக வேண்டி விமான போக்குவரத்துப் பகுதிக்குள் நுழைந்ததாக SPF சொன்னது.

ஆனால் அவருக்கு சிங்கப்பூரை விட்டு செல்லும் எண்ணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைய போர்டிங் பாஸ்களை தவறாகப் பயன்படுத்துவது உள்கட்டமைப்பு பாதுகாப்புச் சட்டம் 2017 இன் படி குற்றமாகும், அதனை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 480 குடியிருப்பாளர்கள் – சான்றிதழ்கள் வழங்கல்