சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தங்கத்தை அனுப்ப, விமான நிலைய ஊழியருக்கு லஞ்சம் கொடுத்தவர் கைது.!

Man bribes airport worker to under-report baggage weight for transporting gold to India (PHOTO: WONG KWAI CHOW)

இந்தியாவிற்கு தங்கத்தை கொண்டு செல்வதற்காக விமான நிலைய ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தருக்கு செக்.

உணவு தயாரிக்கும் நிறுவனத்தின் மேலாளராக கோபால் கிருஷ்ணா ராஜு என்பவர் பணியாற்றிவருகிறார். சைடில், சிங்கப்பூரில் தங்கம் வாங்கி சென்னைக்கு அனுப்பி வியாபாரம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், டைகர் ஏர் விமானத்தில் விமான செக்-இன் ஊழியரிடம் 800 டாலர்கள் லஞ்சமாக கொடுத்து, அதற்காக தவறான ரிப்போர்ட் தர வேண்டும் என்றும் கோபால் கூறியுள்ளார்.

அதிகப்படியான லக்கேஜ் கட்டணங்களை தவிர்ப்பதற்காக, 37 வயதான விமானநிலைய செக்-இன் தொழிலாளி படேல் -லிடம் சென்று, தன் சார்பாக தங்கத்தை கொண்டு செல்லும் பயணிகளுக்கு எடையை குறைத்து கூறும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த உதவியை செய்ய ஒப்புக் கொண்டால் படேல் -க்கு வெகுமதிகள் அளிப்பதாக கோபால் உறுதியளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கோபால் இந்த குற்றச்சாட்டை கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20 அன்று ஒப்புக்கொண்டார். மேலும், ஜனவரி மற்றும் அக்டோபர் 2016க்கு இடையில் குறைந்தது 10 முறை இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கோபால் 5000 டாலர்கள் அபராதம் ஜாமினில் வெளி வந்துள்ளார். மேலும், செப்டம்பர் 23 அன்று தண்டனை குறித்த தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : StraitsTimes