தேர்தல் பிரச்சார சுவரொட்டியை சேதப்படுத்திய நபருக்கு அபராதம்

psp-poster-removed
Cheng Bock's Facebook page.

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் பிரச்சார சுவரொட்டியை சேதப்படுத்திய வழக்கு தொடர்பில் ஆடவர் ஒருவருக்கு S$1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2020 பொதுத் தேர்தலின் போது சிங்கப்பூர் செயல் கட்சியின் (PSP) பிரச்சார சுவரொட்டியை விளக்குக் கம்பத்தில் இருந்து அவர் சேதப்படுத்தி தூக்கி எறிந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

கெப்பல் முனையத்தில் பிரைம் மூவர் கடலுக்குள் விழுந்து ஓட்டுநர் மரணம் – கடலின் 4மீ ஆழத்தில் இருந்து மீட்பு

இந்நிலையில், 53 வயதான சிங்கப்பூரர் கான்ஸ்டன்டைன் பால் என்பவருக்கு நேற்று ஜனவரி 31, செவ்வாய் அன்று S$1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், அவரால் அபராதத்தை செலுத்த முடியவில்லை என்று CNA தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக அவர் நான்கு நாட்கள் சிறையில் இருப்பார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின்கீழ் சுவரொட்டியை சேதப்படுத்திய குற்றத்தை பால் ஒப்புக்கொண்டார்.

அவரது தண்டனையில் மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$7.2 மி. பரிசுத்தொகையை தட்டிச் சென்ற ஒரே ஒருவர் – S$1 க்கு டிக்கெட் வாங்கிய அதிஷ்டசாலி