சிங்கப்பூரில் மது பாட்டிலை கொண்டு நடந்து சென்ற ஆடவர் மீது தாக்குதல்; 4 பேர் மீது குற்றச்சாட்டு!

சிங்கப்பூரை சேர்ந்த நிதி ஆலோசகரான ஜஸ்டின் சுவா யோங் ஜியே (30) என்பவர் கடந்த மாதம் 20ம் தேதி அன்று மெர்சண்ட் சாலையில் நடந்துகொண்டிருந்தபோது திடீரென மது பாட்டிலை கொண்டு தலையில் ஓங்கி அடிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.

இந்த தாக்குதலால் அவருக்கு தலையில் மிக மோசமான வெட்டு காயங்களும், குறைந்தது 20 தையல்கள் போட வேண்டிய நிலையும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தாக்குதலுக்கு யார் காரணம் என்று தனக்கு தெரியவில்லை என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அவர் கூறினார்.

எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்வு: சொந்த நாடு திரும்பிய “சிங்கப்பூரில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மலேசிய ஊழியர்கள்”

இந்நிலையில், அவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

மரணம் விளைவிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதற்காக நேற்று முன்தினம் (ஏப்.01) சிங்கப்பூரை சேர்ந்த சலிம் (22) என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மது பாட்டிலை கொண்டு கடந்த மாதம் 20ம் தேதி இரவு 10.45 மணி அளவில் சுவாவின் தலையில் அவர் ஓங்கி அடித்ததாகக் கூறப்படுகிறது.

சுவாவிற்கு படுகாயம் விளைவித்தற்காக மேலும் மூன்று பேர் மீதும் இந்த வாரம் குற்றம் சுமத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர் தற்போது குணமடைந்து வருவதாகவும் அவருக்கு 17 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவரது காதலி கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இனவெறி பிரச்சனை – இந்திய மற்றும் மலாய் மக்களின் கருத்து