துரியன் பழங்களை திருடும் வீடியோ இணையத்தில் வைரல் – சி.சி.டி.வி.யால் சிக்கிய நபர்

Durian Steal

Jurong East stallஇல் இருந்து சர்வ சாதாரணமாக துரியன் பழங்களை திருடும் நபர்  CCTVயில் சிக்கி தன்னை ஒரு கடுமையான சூழலில் நிறுத்தியுள்ளார். Jurong East இன் துரியன் விற்பனையாளர் ஒருவர், துரியன் பழங்கள் திருடு போகும் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்தார். ஜூன் 22 அன்று அதிகாலை 5:12 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

 

அந்த கானொளியில் நடுத்தர வயது நபர் ஒருவர், தார்ப்பாய் கொண்டு மூடியிருந்த பழக்கடையைக் கடந்து செல்வதைக் காணலாம். அவர் கடையின் முன்புறம் முழுவதும் முன்னும் பின்னுமாக நோட்டமிட்டு பின் துரியன் பழங்களை திருடுகிறார். பின்னர் அவர் அலட்சியமாக துரியன் பழம் ஒன்றைத் தூக்கி, நடந்து செல்கிறார். இதெல்லாம் அந்த கானொளியில் இடம் பெற்று இருந்தது. மேலும் அவர் அந்த பழங்கள் திருடிய நபரை தன் பதிவில் “நீங்கள் முதல் முறை திருடுபவர ?” என்று நக்கலிட்டு உள்ளார்.

 

மேலும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மிகுதியாக இருப்பதன் காரணமாக, துரியன் பழங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.