டான்ஜோங் கடற்கரையில் ஆடவரை தாக்கிய திருக்கை மீன் – பொதுமக்கள் கவனம்

Man stung by stingray at Tanjong Beach
PHOTO: Tanjong Beach Club/Facebook and Nature Society (Singapore)/Facebook

சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் பலர் வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்க கடற்கரைக்குச் செல்வது வழக்கம்.

சென்டோசாவுக்கு சென்ற ஒருவர், டான்ஜோங் கடற்கரையில் திருக்கை மீன் தன்னை தாக்கியது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆடவரை கொலை செய்த சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது

மேலும் கடற்கரை செல்வோர் கவனமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளார்.

நேச்சர் சொசைட்டி (சிங்கப்பூர்) பேஸ்புக் குழுவில் அந்த நபர் ஏப்ரல் 3ம் தேதி இதனை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தண்ணீரை விட்டு வெளியேறும்போது தற்செயலாக திருக்கை மீனை மிதித்துள்ளார்.

அப்போது திருக்கை மீன் அவரின் காலில் குத்தி காயத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் சுமார் 60-80 செ.மீ ஆழத்தில், கரையிலிருந்து சுமார் 2மீ தொலைவில் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் காயம் ஏற்பட்ட தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், கடற்கரை செல்வோர் கவனமாக இருக்குமாறு அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

லிட்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 8 பேர் கைது