கடும் ஊனமுற்ற தனது தாயை 12 ஆண்டுகளாக கவனித்து வரும் 22 வயது மகன்

கடும் ஊனமுற்ற தனது தாயை 12 ஆண்டுகளாக கவனித்து வரும் 22 வயது மகன்

22 வயது இளைஞர் ஒருவர் கடுமையான ஊனத்தால் பாதிக்கப்பட்ட தனது தாயை 12 வருடங்களாக கவனித்து வருகிறார்.

சீனாவின் ஷான்சி நகரைச் சேர்ந் யாங் ஜியாங் என்ற அவர், 2011 ஆம் ஆண்டு முதல் தனது தாயை கவனித்து வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.

சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கு இவை முக்கியம்: செப்.19 முதல் கட்டாயம் – மீறினால் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து

யாங் தனது தாய் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று அவருக்கு தேவையான அனைத்தையும் தினமும் செய்து வருகிறார்.

அன்றாட தேவைகளான சாப்பாடு, தலைமுடியை உலர்த்துதல், பல் துலக்கி விடுதல் மற்றும் எளிய பிசியோதெரபி பயிற்சிகளையும் தன் தாய்க்கு யாங் செய்வதை வீடியோவில் காண முடிந்தது.

அதோடு மட்டுமல்லாமல், மேக்கப் போட்டு விடவும் அவர் தான் உதவுவார்.

தன் தாய் ஊனத்தால் பாதிக்கப்பட்ட போதிலும் அதனால் அவர் உடைந்து விடக்கூடாது என்று ஷாப்பிங் மற்றும் உணவு உண்ண ஹோட்டலுக்கும் அவர் அழைத்து செல்வார் என கூறப்பட்டுள்ளது.

உடல் ரீதியாக சிரமத்தை சந்தித்து வரும் அந்த பெண்மணி, தன் பிள்ளையை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

மற்ற அனைவருக்கும் யாங் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

சிங்கப்பூரில் வேலை.. உணவு, போக்குவரத்துக்காக நாள் ஒன்றுக்கு S$13 மட்டும் செலவிடும் வெளிநாட்டு ஊழியர்