போலீசிடம் தகராறு செய்த ஆடவரை மின் அதிர்வு துப்பாக்கி மூலம் சுட்டுப்பிடித்த அதிகாரிகள் – காணொளி

Man tased arrested by police
(Video Screengrab)

அரசு ஊழியரை கடமையை செய்யவிடாமல், வேண்டுமென்றே தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின்பேரில் 41 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது இடத்தில் தொல்லை ஏற்படுத்தியது, திருட்டு மற்றும் போதைப்பொருள் தொடர்பான சந்தேக குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 2 நோய்த்தொற்று பரவல் குழுமங்கள் அடையாளம்

நேற்று (ஜூலை 16) மதியம் 1.50 மணியளவில், அந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஜலான் புசார் பகுதியில் உள்ள ஒரு காஃபிஷாப்பில் அவர் கீழே விழுந்துள்ளார், அதை தொடர்ந்து அவருக்கு உதவிசெய்ய சிலர் முன்வந்துள்ளனர். அவர்களிடம் அவர் ஆக்ரோஷமாக நடந்துள்ளார்.

பின்னர், பிளாக் 802 பிரஞ்சு சாலையில் காவல்துறை அதிகாரிகள் வந்தபோது, ​​அந்த நபர் தன்னைச் சுற்றியுள்ள அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடம் தொடர்ந்து ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

காணொளி:

அதிகாரிகளின் அறிவுரைகளை காதில் வாங்காமல், அவர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகவும், சண்டைக்கு சவால் விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பின்னர், அதிகாரி ஒருவர் அந்த ஆடவரை அடிபணிய வைக்கும் முயற்சியில் தனது கைத்தடியைப் பயன்படுத்தினார்.

இறுதியில், டேசர் என்னும் மின்-அதிர்வு சாதனத்தை பயன்படுத்தி அதிகாரிகள் அந்த ஆடவரை கட்டுக்குள் கொண்டுவந்து கைது செய்தனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.