பிரதமர் லீ-க்கு எதிராக வன்முறை அச்சுறுத்தலா – காவல் துறை என்ன செய்தது ?

police arrested a man

பிரதமர் லீக்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல் விடுத்த 45 வயதான நபர் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் வன்முறையைத் தூண்டும் எந்தச் செயல்களையும் காவல்துறை மன்னிக்காது.

பிரதமர் லீ-க்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் 45 வயது நபர் கைது செய்யப்பட்டார். ஜூலை 8 ஆம் தேதி பிற்பகல் 3:10 மணியளவில் CNA என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் லீக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் கமென்ட் செய்யப்பட்டு இருப்பதாக சிங்கப்பூர் காவல் படைக்கு ஒரு அறிக்கை கிடைத்து. ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இருந்த அந்த பதிவின் கீழ் இவ்வாறு கமெண்ட் செய்யப்படிருந்தது.

தொடர் விசாரணையில் காவல் அதிகாரிகள் ஃபேஸ்புக் பயனாளியின் அடையாளத்தை கண்டுபிடித்தனர். புகார் அளிக்கப்பட்ட ஐந்து மணி நேரத்தில் அவரைக் கைது செய்த காவலர்கள், ஒரு லேப்டாப், ஒரு டேப்லெட் மற்றும் நான்கு கைபேசிகளைக் கைப்பற்றினர்.

வன்முறையைத் தூண்டும் எந்தவொரு செயலுக்கும், யாரேனும் குற்றம் சாட்டப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது. சிங்கப்பூரில் வன்முறையைத் தூண்டும் எந்தவொரு  செயலையும் காவல்துறை மன்னிக்காது” என்றும் சிங்கப்பூர் காவல் படை கூறியுள்ளது.