போக்குவரத்து எதிர்த் திசையில் வாகனத்தைச் செலுத்தியவருக்கு சிறை..!

Man who drove against traffic in fatal AYE crash in 2016 gets one year's jail, 12-year driving ban (PHOTOS: ONG WEE JIN, LIANHE WANBAO)

சிங்கப்பூரில் போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் வாகனத்தைச் செலுத்தியவருக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அயர் ராஜா அதிவேக நெடுஞ்சாலையில் (AYE) போக்குவரத்து திசைக்கு எதிராக ஒரு மெர்சிடிஸ் பென்ஸின் ஓட்டுநர், ஒருவர் வாகனத்தை தவறாக செலுத்தினார்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஓட்டுனருக்கு திங்கள்கிழமை இன்று (நவம்பர் 25) ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துவாஸ் சோதனைச்சாவடியிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு லிம் சாய் ஹெங் என்பவர் தனது வாகனத்தைப் போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் செலுத்தினார்.

இந்த கோர விபத்தில் ஓட்டுநர் லிம் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக நீதித்துறை ஆணையாளர் வின்சட் ஹோங் தெரிவித்தார்.

கண்மூடித்தனமான செயலில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இருப்பினும் அது நோக்கமில்லாக் கொலையாக வகைப்படுத்தப்பட்டது.

மேலும், அவருக்கு 12 ஆண்டுகளுக்கு வாகனத்தை ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.