இஸ்தானாவில் சந்தித்துக் கொண்ட மங்கோலிய பிரதமரும் சிங்கப்பூர் பிரதமரும் என்ன உரையாடினார்கள் தெரியுமா?

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இஸ்தானாவில் மங்கோலிய பிரதமரைச் சந்தித்தார்.சிங்கப்பூரும் மங்கோலியாவும் முக்கியமான நேரங்களில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்திருப்பதாக பிரதமர் லீ கூறினார்.

2020-ஆம் ஆண்டில் Covid-19 பெருந்தொற்று தீவிரமாகப் பரவிய போது சிங்கப்பூரின் அறநிறுவனமான தெமாசெக்,மங்கோலியாவிற்கு பரிசோதனைக் கருவிகளை அனுப்பியதை பிரதமர் லீ சுட்டிக்காட்டினார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மங்கோலிய அரசாங்கம் சிங்கப்பூரின் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு அன்பளிப்பு பைகளை வழங்கியதையும் அவர் குறிப்பிட்டார்.

மங்கோலிய அரசாங்கத்தின் அன்பளிப்பு சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களை ஊக்குவித்ததுடன் மகிழ்ச்சியைத் தந்ததாகவும் அவர் தெரிவித்தார்.மங்கோலிய பிரதமருக்கு மரியாதை செலுத்துவதற்கான மதிய உணவு விருந்தில் பிரதமர் லீ பேசினார்.

நேற்று இஸ்தானா அதிபர் மாளிகையில் விருந்து நடைபெற்றது.’Singapore Corporation Program’ என்ற சிங்கப்பூர் திட்டத்தின்கீழ் நிதி,பொருளாதாரம் ஆகிய அம்சங்களில் கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள 1,600-க்கும் அதிகமான மங்கோலிய அதிகாரிகளை சிங்கப்பூர் வரவேற்றுள்ளது.மேலும் பல மங்கோலிய அதிகாரிகள் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பிரதமர் லீ கூறினார்.