இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால்தான் வேலை நடக்கும்! – கட்டுமானத் துறையும் ஊழியர் மரணமும்

Singapore Resuming Entry Approvals
Pic: MOM
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணியிட உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த ‘Check Safe’ என்ற பொதுத் தரவுத்தளம் விரிவாக்கப்படுகிறது.பாதுகாப்பு நடைமுறை பதிவு கொண்ட ஒப்பந்ததாரர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளூரில் உள்ள சொத்து மேம்பாட்டளர்களுக்கு உதவும் விதமாக கட்டுமானத் துறையல்லாத மற்ற நிறுவனங்களுக்கும் தரவுத்தளம் விரிவாக்கப்படுகிறது.
இனி கல்வி,போக்குவரத்து,உணவுச் சேவைகள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் அடங்கும்.

இந்தாண்டு அதிகரித்து வரும் பணியிட உயிரிழப்புகளை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் சாக்கி நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் அமலில் இருக்கும்போது தொழிலாளர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் வர்த்தக வாய்ப்பு என்ற எண்ணம் ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தாண்டில் இது வரை 34 பணியிட மரணங்கள் பதிவாகின.அவற்றில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய ஊழியர்கள் மரணித்துள்ளனர்.கட்டுமானத் துறையில் பாதுகாப்புத் தலைமைத்துவத்துக்கான அவசியம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.