சிங்கப்பூரில் உங்களுக்கு வங்கி கணக்கு இருக்கா? – வங்கிகள் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள்

mas-new-measures-scam
Teck Tong Teo/Google Maps

சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) மற்றும் சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் சங்கம் (ABS) ஆகியவை வங்கி டிஜிட்டல் சேவைகளின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றன.

சமீபத்திய SMS குறுஞ்செய்தி மோசடிகளில் வாடிக்கையாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அதாவது டிசம்பர் மாதத்தில் மட்டும் 469 பேர் மொத்தமாக S$8.5 மில்லியன் தொகையை இழந்துள்ளனர்.

சில விமான சேவைகளை மாற்றியுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – என்ன காரணம் ?

புதிய நடவடிக்கைகளின் அடிப்படையில், வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல்கள் அல்லது SMSகளில் கிளிக் செய்யக்கூடிய லிங்க் இணைப்புகளை இனி அனுமதிக்காது.

மேலும், முக்கிய வங்கி கணக்கு மாற்றங்கள் செய்யப்படும் போதெல்லாம் கட்டாய யோசிக்கும் கால அளவுகள் வழங்கப்படும்.

அனைத்து நிதி நிறுவனங்களும் இவ்வாறான மோசடிகளைத் தடுக்கவும், அதனை கண்டறியவும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று MAS எதிர்பார்க்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு பண பரிமாற்ற பரிவர்த்தனை அறிவிப்புகளுக்கான வரம்பு இயல்புநிலையாக S$100 அல்லது அதற்கும் குறைவாக அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடிக்கடி மோசடி குறித்த எச்சரிக்கைகள் வழங்கப்படும்.

சிங்கப்பூரில் மிதிவண்டி திருட்டு – ஆடவர் ஒருவரை தீவிரமாக தேடிவரும் போலீஸ்