சிங்கப்பூரில், 2020 எலி ஆண்டை முன்னிட்டு சிறப்பு நாணயங்கள் அறிமுகம்..!!

MAS unveils 2020 Year of the Rat Chinese Almanac coins ( Photo : MAS)

சீனப் பஞ்சாங்கத்தின் படி அடுத்த 2020 எலி ஆண்டை முன்னிட்டு சிறப்பு நாணயங்களை அடுத்த வருடம் ஜனவரி முதல் தேதி சிங்கப்பூர் நாணய வாரியம் (MAS) வெளியிட உள்ளது.

இந்த நாணயங்கள், சிங்கப்பூரின் முதலாவது ஆசியான் மரபுடைமைப் பூங்காவான சுங்காய் புலோ (Sungei Buloh) சதுப்புநில இயற்கைப் பாதுகாப்புப் பகுதியின் பின்னணியில் எலியின் உருவத்தைக் கொண்டிருக்கும். மேலும், நாணயத்தின் மறுபக்கத்தில் தேசத்தின் அடையாளச் சின்னத்துடன் 2020ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்த புதிய நாணயங்கள் 10 வெவ்வேறு பதிப்புகளில் கிடைக்கும் என்று MAS ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நாணயங்களின் முக மதிப்பானது தங்கம், வெள்ளி அல்லது நிக்கல் பூசப்பட்ட துத்தநாகம் ஆகியவற்றில் இருக்கும், மேலும் இதன் வரம்பு $2 முதல் $200 வரை என்றும் கூறியுள்ளது.

சிங்கப்பூர் நாணயச் சாலை (The Singapore Mint) அந்த நாணயங்களை விற்பனைக்கு விடும். இன்று முதல் அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை நாணயங்களை வாங்க முன்பதிவு செய்யலாம்.

அளவுக்கு அதிகமாக முன்பதிவுகள் பெறப்பட்டால், அவர்களுக்கு குலுக்கல் முறையில் நாணயங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.