சிங்கப்பூரில் பழைமையான மஸ்ஜித் அங்குலியா புதுப்பொலிவுடன் நாளை திறப்பு..!

Masjid Angullia will be launching Reopening (Image : Masjid Angullia )

சிங்கப்பூர் முஸ்தபா பேரங்காடி எதிரே, செரங்கூன் சாலையில் உள்ள 130 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க மஸ்ஜித் அங்குலியா பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு மீண்டும் புது பொலிவுடன் நாளை (ஜனவரி 10) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையுடன் திறக்கப்படவுள்ளது.

செராங்கூன் சாலை மற்றும் லிட்டில் இந்தியா பகுதியில் 130 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குலியா மசூதி ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Image : Angullia Mosque

2500 பேர் வரை ஒரே நேரத்தில் இப்பள்ளிவாசலில் தொழுகையில் பங்கேற்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மசூதியில் தினசரி மற்றும் வாராந்திர நிகழ்ச்சிகளை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Image ; Angullia Mosque

கூடுதல் விவரங்களுக்கு : http://www.angulliamosque.com.sg/programs.html