இனி முகக்கவசம் அவசியமானதா? – தேசியதினப் பேரணி உரையில் முகக்கவசம் குறித்து பிரதமர் என்ன கூறினார்?

File Photo covid
சிங்கப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுப் பரவலின் அச்சுறுத்தலால் சுகாதாரக் கட்டுப்பாடுகள்,முகக்கவசம் அணிதல் போன்ற பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் இருந்தன.
தற்போது பொதுப் போக்குவரத்து மற்றும் சுகாதார நிலையங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் கட்டாய முகக்கவசம் அணியும் விதிமுறைகள் விரைவில் தளர்த்தப்படும் என்று பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் தொற்று பரவல் குறைந்துள்ளதால் முகக்கவச விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளதாக தேசியதினப் பேரணி உரையில் திரு.லீ குறிப்பிட்டார்.இருப்பினும் இப்போதே முகக்கவசத்தை கழற்றிவிட வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இப்போது திறந்தவெளிகளில் முகக்கவசம் கட்டாயமில்லை என்றாலும் உட்புற உணவகங்கள்,கடைதொகுதிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

விதிமுறையானது தளர்த்தப்பட்டபின்,பெரும்பாலான உட்புறங்களில் முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.