சிங்கப்பூரில் இலவச முகக்கவசத்திலும் மோசடி… 2 பேர் பிடிபட்டனர்!

(PHOTO: Seah Kian Peng / FB for illustrative purposes)

Temasek அறக்கட்டளையின் இயந்திரங்களிலிருந்து முகக்கவசங்களை பெற்றுக்கொள்வதில் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இரு பெண்களை விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி பெண்கள் முகக்கவசங்களை பெற்றுக்கொண்டதாக காவல்துறை (மார்ச் 12) தெரிவித்துள்ளது.

துவாஸ் உணவகத்திற்குள் சென்று மோதிய வேன் – 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!

முதல் வழக்கு

56 வயதான பெண் ஒருவர், பாசீர் ரிஸில் உள்ள பல்வேறு இயந்திரங்களிலிருந்து 20க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தன்னால் முகக்கவசத்தை பெற முடியவில்லை என்று கடந்த மார்ச் 3ம் தேதி பெண் ஒருவரிடம் இருந்து புகார் வந்ததை அடுத்து காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்தனர்.

அதனை அடுத்து, Temasek அறக்கட்டளையுடன் மேற்கொண்ட சோதனையில் முகக்கவசம் ஏற்கனவே பெறப்பட்டது தெரியவந்தது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர், மார்ச் 11 அன்று அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

இரண்டாம் வழக்கு

மற்றொரு வழக்கில் 43 வயது பெண் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள இயந்திரத்தில் இருந்து தனது முகக்கவசத்தை பெற முடியவில்லை என கடந்த மார்ச் 5ஆம் தேதி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து காவல்துறைக்கு புகார் வந்தது.

முதல் வழக்கைப் போலவே, இவருடைய முகக்கவசமும் ஏற்கனவே இயந்திரங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது.

அந்த பெண் மார்ச் 8ஆம் தேதி அடையாளம் காணப்பட்டார், 5 முகக்கவசங்களை பெற அவர் சட்டவிரோதமாக தகவல்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இரண்டு வழக்குகளுக்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தினந்தோறும் சிங்கப்பூர் – திருச்சி இடையே விமானங்களில் செல்லலாம்..!