உரிமம் இல்லாமல் 2.2 மில்லியன் மாஸ்க் உற்பத்தி – நிறுவனத்திற்கு S$10,000 அபராதம்

masks manufacturing without required licence fined
The masks as advertised on Shopee

உற்பத்திசெய்யும் உரிமம் இல்லாமல் 2.2 மில்லியனுக்கும் அதிகமான அறுவை சிகிச்சை முகக்கவசங்களை தயாரித்த நிறுவனத்திற்கு S$10,000 அபராதம் (நவம்பர் 1) விதிக்கப்பட்டது.

Inno Medical நிறுவனம் ஒரு வருட காலமாக கவனிக்க தவறியதால், உரிமத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.

குஜராத் பாலம் இடிந்து விழுந்து 130க்கும் மேற்பட்டோர் மரணம்: இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் லீ

உற்பத்தியாளர் உரிமம் இல்லாமல் A வகுப்பு மருத்துவ சாதனத்தை தயாரித்ததற்காக சுகாதாரப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நிறுவனத்தின் பிரதிநிதி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இதில் கடந்த ஆண்டு 2021 ஜூன் மாதத்தில், நிறுவனத்தின் முகக்கவசங்கள் கைப்பற்றப்பட்டன,

மேலும் அதன் விநியோகத்தை ஆன்லைன் பட்டியலில் இருந்து அகற்றுமாறு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி ஆடவர்: குற்றமற்றவர் என அதிரடி தீர்ப்பு