‘கூட்டுப் பொங்கல் விழா’- பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து அசத்திய பெண்கள்!

'கூட்டுப்பொங்கல் விழா'- பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து அசத்திய பெண்கள்!
Photo: Lisha

 

லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கமும் (Lisha), இந்திய மரபுடைமை நிலையமும் (Indian Heritage Centre- ‘IHC’) இணைந்து சிங்கப்பூரின் தேக்கா பகுதியில் உள்ள அரங்கத்தில் நேற்று (ஜன.19) கூட்டுப் பொங்கல் (Mass Pongal 2024) விழாவை நடத்தியது.

லிட்டில் இந்தியாவில் புதுப்பொலிவுடன் மீண்டும் “சரவண பவன்” உணவகம் – 550 உணவு வகைகளுடன் 3 வேளை சாப்பாடு

'கூட்டுப்பொங்கல் விழா'- பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து அசத்திய பெண்கள்!
Photo: Lisha

கூட்டுப் பொங்கல் விழாவில், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முதலில் பொங்கல் பானைக்கு வர்ணம் தீட்டிய பெண்கள், பொங்கல் வைக்கும் இடத்திற்கு முன்பு அழகான ரங்கோலி கோலத்தைப் போட்டு, குத்துவிளக்குகளில் தீபம் ஏற்றி, விறகு அடுப்புப் போன்று இருக்கும் கரி அடுப்பில் பொங்கல் பானையை வைத்து, பொங்கல் அரிசி, வெல்லம் ஆகியவற்றை பொங்கல் பானையில் போட்டனர். பின்னர் பொங்கல் பொங்கியவுடன், ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறிய பெண்கள், பொங்கல் பானையை கீழே இறக்கி வைத்து நெய் மற்றும் முந்திரியை பொங்கலுடன் சேர்த்து கலக்கினர்.

பொங்கல் வைத்த பானைகளுடன் குடும்பத்துடன் செல்பி புகைப்படங்களையும் பெண்கள் எடுத்து மகிழ்ந்தனர். முதலில் பொங்கிய பானைகள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா 1,000 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மோல்மென் கேர்ன்ஹில் நல்லிணக்க வட்டத்தின் தலைவர் டேவிட் காய் ஜின்ஹாங் வழங்கினார்.

'கூட்டுப்பொங்கல் விழா'- பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து அசத்திய பெண்கள்!
Photo: Lisha

முன்னர் வரவேற்பாளராக பணிபுரிந்திருந்த பெண், தற்போது யாசகம் கேட்கும் நிலை

பாரம்பரிய உடை அணிந்து வந்த ஆண்களும், பெண்களும் கூட்டுப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, பாரம்பரிய முறைப்படி கரி அடுப்பில் பொங்கல் வைத்தது விழாவிற்கு மெருகூட்டியது.