அந்த மாறி சேவை.. “S$50 முதல் S$150 கட்டணம்”.. கடைக்கு வெளியே நின்று கொண்டு ஆண்களை வற்புறுத்தி அழைக்கும் பெண்கள்

peoples-park-centre-massage
Shin Min Daily News

சிங்கப்பூர்: பெண்கள் கடைக்கு வெளியே நின்று கொண்டு, ஆண்களை அந்த மாறி சேவைகளுக்கு வற்புறுத்தி அழைப்பதாக கூறப்பட்டுள்ளது.

சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் சென்டரின் மூன்றாவது மாடியில் உள்ள தனது கடைக்கு வெளியே அந்த பெண் நின்று கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை ரோட்டில் வைத்து தாக்கும் ஆடவர் – வெளியான வீடியோ: தகவல் கேட்கும் அமைப்பு

வாசகர் வழங்கிய செய்தியின் அடிப்படையில், அந்த பெண் பற்றிய செய்தியை ஷின் மின் டெய்லி நியூஸ் (Shin Min Daily News) தெரிவித்துள்ளது.

அந்த கட்டிடத்தில் இயங்கும் மசாஜ் நிலையம் பாலியல் சேவைகளை வழங்குகின்றது என சந்தேகிக்கப்படுவதாக அது கூறியுள்ளது.

உடல் பாகங்களை வெளிக்காட்டும் வகையில் அரைகுறை ஆடைகளை அணிந்து, கடை வழியாக செல்லும் ஆண்களை பாலியல் சேவைக்கு அழைக்கும் முயற்சியில் அந்த பெண் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

அந்த பெண் நடுத்தர வயது ஆடவர் ஒருவரை அணுகி பேசுவதையும் ஷின் மின் புகைப்படமாக வெளியிட்டுள்ளது.

இது குறித்து நேர்காணல் செய்யப்பட்ட 32 வயது ஆடவர் ஒருவர் கூறியதாவது; தாம் சாதாரணமாக மசாஜ் செய்ய கடை ஒன்றுக்கு சென்றதாகவும், அங்கு நுழைந்தபோது ​​​​மசாஜ் செய்யும் பெண் அவரை கடையின் பின்புறம் அழைத்துச் சென்று திரைச்சீலைகளை மூடி, பின்னர் கதவைப் பூட்டி விளக்குகளை அணைத்ததாகவும் கூறினார்.

பின்னர் ஆடவர் மீது கைவைத்து “என்ன சேவை உங்களுக்கு வேண்டும்?” என கேட்டு, அதற்கான விலைப் பட்டியலையும் அவர் சொன்னதாக குறிப்பிட்டார்.

அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக, “அதிகாரிகள் திடீர் ஆய்வுக்கு வருவதைப் பற்றி நான் கவலைப்படுவதாகக் கூறினேன்” என்றார்.

பதிலுக்கு, மசாஜ் செய்பவர் கூறியதாவது: “அவர்கள் நேற்று தான் சோதனை நடத்த வந்தார்கள், எனவே இன்று வரமாட்டார்கள். நீங்கள் கவலை கொள்ளாமல் சேவையை அனுபவிக்கலாம்” என்றார்.

இருப்பினும், அவர் இதனை நிராகரித்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண், ​​​​தனது அணுகுமுறை எதிர்மறையாக மாற்றியதாக அவர் சொன்னார்.

சட்டவிரோத பாலியல் சேவைகளுக்கு S$50 முதல் S$150 வரை அவர்கள் வசூல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வந்தால் தகவல் வழங்க அந்த பெண்ணுக்கு இரண்டு ஆடவர்கள் உதவிக்கு இருப்பதாக வாசகர் கூறியுள்ளார்.

ஏதேனும் தவறாக நடக்கப்போவது குறித்து அறிந்தால், அந்த பெண்களுக்கு அவர்கள் தகவல் தெரிவிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடிவிடுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கல்லறைகளில் “பேய்கள் எச்சரிக்கை” பலகை – உண்மை என்ன?