ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் பயங்கர தீ விபத்து (Video)… செட் முழுவதும் எரிந்து நாசம் – தீவீர விசாரணை

சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் (East Coast Park) நேற்று புதன்கிழமை (பிப். 16) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

நீண்ட கால அனுமதி உடையோருக்கு VTP பயண அனுமதி அவசியம் இல்லை – அப்போ Work Permit அனுமதிக்கு?

நேற்று பிப். 16 இரவு 9:30 மணியளவில் 1110 ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் (East Coast Parkway) ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த பெரும் தீ விபத்தில் செட் கொட்டகையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. அதனை வீடியோ மூலம் காண முடிகிறது.

பின்னர் இந்த தீயை நுரை ஜெட் கருவி மூலம் SCDF வீரர்கள் அணைத்தனர். இதில் காயங்கள் எதுவும் யாருக்கும் ஏற்படவில்லை.\

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பான விசாரணை நடைபெறுகிறது என்று SCDF தெரிவித்துள்ளது.

நான்கு நாடு/பகுதிகளுக்கான VTL சேவையை தொடங்க உள்ளது சிங்கப்பூர் – பிப். 22 முதல் VTP அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்!