சாலையின் நடுவே விழுந்த ராட்சத மரம் – நசுங்கிய கார்.. ஸ்தம்பித்த போக்குவரத்து

Massive tree falls Tiong Bahru Road

தியோங் பாரு சாலையின் குறுக்கே பெரிய மரம் ஒன்று விழுந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தது.

மரம் விழுந்ததில் கார் ஒன்று நசுங்கியதாகவும், மேலும் இருவழித்தடங்களிலும் போக்குவரத்து பாதித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்: யார் அவர் விசாரணை..

இந்த சம்பவம் மார்ச் 3, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடந்ததாக சிஎன்ஏ தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள ஐந்து பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்க வேண்டும் என SBS ட்ரான்ஸிட் சுமார் மாலை 6 மணிக்கு ஒரு ட்வீட்டில் தெரிவித்தது. அதன் எட்டு பேருந்துகள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.

தியோங் பாரு பிளாசா வரை பேருந்துகள் வரிசையாக அணிவகுத்து நின்ற காட்சிகள் இணையத்தில் வைரலானது.

பிளாக் 24 தியோங் பாரு சாலைக்கு முன்னால் உள்ள பாதுகாப்பான நடைபாதை சேதமடைந்தது.