மாட்டு பொங்கல் திருநாள்: மிக புனிதமாக கருதப்படும் மாடுகளை கௌரவித்த சிங்கப்பூர் தமிழ் மக்கள்!

LISHA/FB

சிங்கப்பூரில் மாட்டு பொங்கல் திருநாளில் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழ் மக்கள் அதனை வழிபட்டு சென்றனர்.

மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் மாடுகளை கௌரவிப்பதற்காக தமிழர்களால் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஓட்டுநர் கண்ணாடி வழி முன் அங்கத்தை பார்த்ததாக வீடியோ வெளியிட்ட பெண் பயணி – பெண்ணை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

அதன் அடிப்படையில், தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை வழிபட மக்கள் திரண்டனர். அங்கு ஆர்வத்துடன் கூடியிருந்த அனைவருக்கும் இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

LISHA/FB
LISHA/FB

இந்த இனிமையான தருணத்தில், இந்திய கலாச்சாரத்தின் மீது தங்கள் அன்பையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்திய ஒவ்வொரு நபருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமை சங்கம் (LISHA) தெரிவித்தது.

ஹார்ன் அடித்தது குத்தமா? – ஊழியரை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுனரிடம் சீறிப்பாய்ந்த விதி மீறும் குழு (காணொளி)