மே 13- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

Photo: Sri Sivan Temple

சிங்கப்பூரில் 24 கெய்லாங் ஈஸ்ட் அவன்யூ 2- ல் (24 Geylang East Avenue 2) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இக்கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலில் விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம் ஆகும்.

திக்குமுக்காடச் செய்யும் கொக்கோ கோலாவின் புதிய சுவை பானம் – சிங்கப்பூரில் மே 16 முதல் விண்வெளி பானம் அறிமுகம்

அந்த வகையில், வரும் மே 13- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிரதோஷ பூஜை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், வரும் மே 13- ஆம் தேதி மாலை 04.20 PM மணி முதல் மாலை 05.45 PM மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/TermArchanai/BookTermarchanai என்ற இணையப் பக்கத்தில் பதிவுச் செய்யலாம்.

உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப் பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையைப் பார்க்க முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.

தமிழகத்தை சேர்த்த ஓட்டுனருக்கு லாரி ஓட்டத் தடை – S$1,000 அபராதம் விதிப்பு

இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற கோயிலின் அலுவலக எண்ணுக்கு தொடர்புக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.