மே 15- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை!

Photo: Sri Mariamman Temple

சிங்கப்பூரில் 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இக்கோயிலில் விஷேச நாட்களில் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வரும் மே 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பௌர்ணமி என்பதால், பௌர்ணமி பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர்!

அதன்படி, இந்த நாளில் பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம். http://smt.org.sg/ என்ற கோயில் இணையப் பக்கத்திலும் அவற்றை வாங்கிக் கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.

நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே பக்தர்கள் கோயில் வளாகத்தைச் சுற்றி வர முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பௌர்ணமி வழிப்பாட்டைப் பார்வையிடலாம்.

சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் லாரியில் கடத்தப்பட்ட நாய்கள் – கடத்தலின் பின்னணி என்ன?

மேல் விவரங்களுக்கு 62234064 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.