மே 3- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

Photo: Sri Sivan Temple

சிங்கப்பூரில் உள்ள 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயிலில், வரும் மே 3- ஆம் தேதி அன்று பிரதோஷ பூஜை (Prathosham Prayers) நடைபெறவுள்ளது. பக்தர்கள் https://sst.org.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் அதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பதிவு செய்யலாம்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகம்!

அதைத் தொடர்ந்து, உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள், அபிஷேகப் பொருட்களையும், வில்வ அர்ச்சனையையும் செலுத்தி விடுவார்கள். பக்தர்கள் பிரதோஷப் பூஜையை கோயிலில் அமர்ந்துப் பார்க்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தெரிவித்துள்ளது.