“அதிகமான பொருளாதார சவால்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்” – பிரதமர் லீ!

NTUC May Day Rally pm lee speech
pm lee nd speech at ite college

உக்ரைனில் போர் மற்றும் விலைவாசி அதிகரித்து வரும் இந்த சூழலில், சிங்கப்பூரர்கள் அதிகமான பொருளாதார சவால்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 1) கூறியுள்ளார்.

ஆனால், சிங்கப்பூர் மக்கள் மீதான பாதிப்பைக் குறைக்கவும், விலைவாசி அழுத்தங்களைக் குறைக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் அரசாங்கம் செய்து வருகிறது என்று பிரதமர் லீ கூறினார்.

நாகேந்திரன் கே. தர்மலிங்கம் வழக்கு: கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மலேசியாவுக்கு பதில் கூறிய பிரதமர் திரு லீ!

மே தின சிறப்பு உரையாற்றிய திரு லீ, இந்த ஆண்டு சிங்கப்பூர் பட்ஜெட்டின் பல நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த ஆண்டு பட்ஜெட் பல குடும்பங்களுக்கு உதவ நேரடி நடவடிக்கைகளை கொண்டிருந்தகாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதாவது, U-Save தள்ளுபடிகள், CDC வவுச்சர்கள் மற்றும் S&CC தள்ளுபடிகள் ஆகியவை குடும்பங்களுக்கு செலவுகளைக் குறைக்கும் என்பதை அவர் சொன்னார்.

அதிக உதவி தேவைப்படும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் மேலும் அதிகமானவற்றை பெறுவார்கள் என்பதையும் அவர் பதிவு செய்தார்.

வெப்பம் தணிந்து இடியுடன் கூடிய மழை பெய்யும்… மகிழ்ச்சியான செய்தி!