லக்சா பர்கரை அறிமுகப்படுத்த உள்ளது McDonald’s – 2022 தேசிய தின சிறப்பு பர்கர் !

laksa burger

McDonald’s Singapore 2022 தேசிய தினத்திற்காக லக்சா பர்கரை அறிமுகப்படுத்த உள்ளது. நாசி லெமாக், சிக்கன் ரைஸ், மற்றும் இப்போது லக்சா என மெக்டொனால்ட்ஸால் பர்கராக மாற்றப்படும் சமீபத்திய உள்ளூர் உணவாகும்.

லக்ஸா டிலைட் பர்கர், 2022 ஆம் ஆண்டு தேசிய தினத்திற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இரண்டு வறுக்கப்பட்ட வெண்ணெய் பன்களுக்கு இடையில் இறால் பாவ்ட்டி, க்ரீமி லக்சா சாஸ், கீரை, ஊதா முட்டைக்கோஸ் உள்ளடக்கி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், தயாரிப்புகளின் போஸ்டர்கள் கடைகளில் காணப்படுகின்றன. வரவிருக்கும் பர்கர் பற்றிய விவரங்கள் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.