தொழிற்சாலையில் கரப்பான் பூச்சி, எலி.. முதலாளிக்கு S$18,000 அபராதம்

meat-factory-cockroaches FINE
SFA

உட்லண்ட்ஸ் லூப்பில் உள்ள இறைச்சியை சுட்டு பதப்படுத்தும் தொழிற்சாலையில் சிங்கப்பூர் உணவு அமைப்பை (SFA) சேர்ந்த அதிகாரிகள் கடந்த மார்ச் 31 அன்று சோதனை செய்தனர்.

அப்போது, ​​கரப்பான் பூச்சிகள் சுதந்திரமாக உலாவுவதையும், எலி போன்ற உணவுப்பொருள்களைப் பாழ்படுத்தும் மற்ற உயிரிகளையும் அங்கு கண்டனர்.

சிங்கப்பூரில் இனி அதிவேக இன்டர்நெட் – மிரட்டும் வேகம் விரைவில்

இந்நிலையில், கிம் சூன் செங் டிரேடிங் நிறுவன உரிமையாளரான பாய் சோய் சியாங் (67) என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது இறைச்சி மற்றும் மீன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சுகாதாரம் தொடர்பான குற்றங்களுக்காக அவருக்கு S$18,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த தொழிற்சாலையின் பிரதான வேலை, இறைச்சியை சுட்டு பதப்படுத்துவது ஆகும். இது 1990 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.