கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மருத்துவ மாணவி… ரூபாய் 2 லட்சம் வழங்கிய சிங்கப்பூர் வாழ் தமிழர்!

Photo Credits: Sun news

மருத்துவப் படிப்பிற்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு சிங்கப்பூர் வாழ் தமிழர் ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

“முடிவில்லா நோய்” வகையில் கோவிட்-19 ஐ சேர்த்த நாடு – பயணிகளுக்கு நீக்கப்படவுள்ள சோதனை தேவைகள்!

மதுரை மாவட்டம், நேரு நகர் பகுதியைச் சேர்ந்த சிதம்பரநாதன்- கோமதி தம்பதியின் மகள் ஜெயஹரிணி நீட் தேர்வில் வெற்றிப் பெற்றவர். இவருக்கு தமிழக அரசின் இட ஒதுக்கீட்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் மருந்துப் பொருட்களை விற்பனை செய்து வரும், அவருடைய தந்தையால் ஆண்டுக்கு ரூபாய் 2.50 லட்சம் கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பொருளாதார சூழல் காரணமாக தங்கள் மகளின் மருத்துவப் படிப்பு கேள்வி குறியானது பற்றி மாணவியின் தாய் தமிழகத்தின் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சிங்கப்பூர் வாழ் தமிழர் சுந்தர் என்பவர் மாணவி ஜெயஹரிணியின் மருத்துவப் படிப்புக்கான கட்டணமான ரூபாய் 2 லட்சத்தை அவரது கல்லூரியில் செலுத்தியுள்ளார்.

இதுதான் நம்ம சிங்கப்பூர்…தைப்பூச திருவிழாவை உலகநாடுகளின் பாரம்பரிய கலாசார மரபு பட்டியலில் சேர்க்க பரிந்துரை!

மருத்துவக் கனவை நனவாக்கியவர்களுக்கு மாணவி ஜெயஹரிணி மற்றும் அவரது பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.